Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தகுதியுடைய நபர்கள் அனைவரும் உரிய காலத்திற்குள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள...சுகாதாரத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் தகுதியுடைய நபர்கள் அனைவரும் உரிய காலத்திற்குள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள...சுகாதாரத் துறை அறிவிப்பு

By: vaithegi Wed, 29 June 2022 8:18:49 PM

தமிழகத்தில் தகுதியுடைய நபர்கள் அனைவரும் உரிய காலத்திற்குள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள...சுகாதாரத் துறை அறிவிப்பு

தமிழகம்: கொரோனா தொற்று சமூக இடைவெளியை கடைப்பிடிகாமலும் , முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வதால் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுகிறது.

இதையடுத்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமனால் கண்டிப்பாக பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், வாய் மற்றும் மூக்கை சரியாக மூடும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடித்தால் தான் ஓரளவிற்கு கொரோனா தொற்றை குறைக்கலாம்.

corona vaccine ,கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்த போதும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் அதிகரிக்க அதிகரிக்க முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூபாய் 500 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டுமே ரூ. 76,00,87,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் கொரோனா பரவுவதை கருத்தில்கொண்டு கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறிய நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தாலும் கூட உடனடியாக பரிசோதனை செய்து பரிசோதனை முடிவை தெரிந்து கொண்டு தங்களைத் தானே தனிமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய நபர்கள் உரிய காலத்திற்குள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Tags :