Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பஞ்சாப் காவல்துறையினரின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்து அறிவிப்பு?

பஞ்சாப் காவல்துறையினரின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்து அறிவிப்பு?

By: Nagaraj Fri, 07 Apr 2023 4:54:02 PM

பஞ்சாப் காவல்துறையினரின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்து அறிவிப்பு?

அமிர்தசரஸ்: காவல்துறை விடுமுறைகள் ரத்து... பஞ்சாப் காவல்துறையின் அனைத்து விடுமுறைகளையும் ஏப்ரல் 14ம் தேதி வரை ரத்து செய்வதாக பஞ்சாப் காவல்துறை டிஜிபி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேடப்படும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், ‘அகல் தக்த்’ சீக்கிய அமைப்பிடம் கேட்டதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி பஞ்சாபில் ‘சர்பத் கல்சா’ நடத்துமாறு கூறியதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து காவல்துறை இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங். ‘ஆனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்க முயற்சிப்பதாக அவர் மீது புகார் உள்ளது. இந்நிலையில், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

bjp,dgp.,notice, ,அதிரடி, டிஜிபி., நோட்டீஸ், விடுமுறை ரத்து

கடந்த 18ஆம் தேதி (மார்ச் 18) முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலைகளிலும் தெருக்களிலும் சுற்றித் திரியும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், இதுவரை அவரை கைது செய்ய போலீசாரால் முடியவில்லை. இதனிடையே, நான் எங்கும் ஓடவில்லை, விரைவில் அனைவர் முன்னிலையிலும் தோன்றுவேன் என அம்ரித்பால் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், ‘அகல் தக்த்’ என்ற சீக்கிய அமைப்பினர், பஞ்சாபில், ‘சர்பத் கல்சா’ நிகழ்ச்சியை, ஏப்., 14ல் நடத்த, அம்ரித்பால் சிங் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகுதான் விடுமுறை கோர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமிர்தசரஸில் இருந்து பதிண்டாவில் உள்ள தத்தாமா சாஹிப் வரை பேரணி நடத்துமாறு அம்ரித்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியும் அம்ரித்பால் சிங் வந்துவிடுவார் என சந்தேகிக்கும் போலீசார், அவரை கைது செய்ய தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags :
|
|
|