இந்த மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
By: vaithegi Wed, 02 Aug 2023 10:13:32 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஓட்டி வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை ..ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தா தம்பதியருக்கு 1756-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மகனாகப் பிறந்தவர் தீரன் சின்னமலை.
தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், இளம் வயதிலேயே வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்ற போர்க்கலைகளை கற்றுத்தேர்ந்தவர். மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க பல புதிய போர் யுக்திகளைக் கையாண்டு போராடினார்.
இதனை அடுத்து பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805 -ம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர்.
அத்தகைய புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 218-வது நினைவு நாளான 3.8.2023 -ம் தேதி, திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அன்றைய விடுமுறையை ஈடு செய்ய வருகிற ஆகஸ்ட் 26- ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.