Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

By: Nagaraj Thu, 13 July 2023 8:06:21 PM

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

புதுடில்லி: எதிர்ப்புகள் அதிகரித்த காரணத்தால் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர ‘பி.ஜி. நீட் தேர்வு எழுதி வந்தனர். இந்நிலையில், அதற்கு மாற்றாக ‘நெக்ஸ்ட்’ என்ற புதிய தேர்வு முறையை தேசிய மருத்துவ ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

adjournment,date,examination,next, ,ஒத்திவைப்பு, தேதி, தேர்வு, நெக்ஸ்ட்

மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு தேர்வுகளாக நடைபெறும் என்றும், வருகிற 28-ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நெக்ஸ்ட் தேர்வுக்கு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|