Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்வது குறித்து அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்வது குறித்து அறிவிப்பு

By: Nagaraj Mon, 29 May 2023 11:16:13 PM

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்வது குறித்து அறிவிப்பு

சென்னை: மறு கூட்டல் குறித்த அறிவிப்பு... பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்வது, மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு செய்வது குறித்த அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 8ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்த மாணவர்களின்‌ விடைத்தாள்‌ நகலினை நாளை(மே.30) பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

fees,denial,subject,biology,govt exams,directorate , கட்டணம், மறுக்கூட்டல், பாடம், உயிரியல், அரசு தேர்வுகள், இயக்ககம்

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து விண்ணப்பித்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுக்கூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.205 எனவும், உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|