Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாடசாலைகளில் முககவசம் அணியும் நடைமுறை குறித்து அறிவிப்பு

பாடசாலைகளில் முககவசம் அணியும் நடைமுறை குறித்து அறிவிப்பு

By: Nagaraj Thu, 08 Dec 2022 11:07:57 AM

பாடசாலைகளில் முககவசம் அணியும் நடைமுறை குறித்து அறிவிப்பு

ஹாமில்டன்: ஹாமில்டனின் பாடசாலைகளில் முக கவசம் அணியும் நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹாமில்டன் பொது பாடசாலை சபையினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பாடசாலைக்கு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாமில்டனின் வென்ட்வோர்த் மாவட்ட பாடசாலை சபையின் உறுப்பினர்கள் தற்காலிக அடிப்படையில் இந்த முக கவச நடைமுறையை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

individual,province,school,councils,mask,negotiation ,ஒன்றாரியோ, மாகாணம், பாடசாலை, சபைகள், முகக்கவசம், பேச்சுவார்த்தை

வென்ட்வோர்த் மாவட்ட பாடசாலைகளில் இந்த முக கவச நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. எவ்வாறெனினும், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பினால் முக கவசம் இன்றி பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் இது தொடர்பில் கட்டுப்பாடுகள் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சளிக்காய்ச்சல் மற்றும் கோவிட்19 பரவுகை அச்சுறுத்தல்கள் காரணமாக இவ்வாறு முக கவச நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் ஏனைய சில பாடசாலை சபைகளும் முக கவச நடைமுறையை மீள அறிமுகம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|