Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுமுறையை முன்னிட்டு மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டாது என அறிவிப்பு

விடுமுறையை முன்னிட்டு மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டாது என அறிவிப்பு

By: vaithegi Sat, 21 Oct 2023 2:57:12 PM

விடுமுறையை முன்னிட்டு மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டாது என அறிவிப்பு

சென்னை: இனி டென்ஷன் இல்லாம வேலையை பாருங்க ... தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை பயனர்களுக்கு வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து இப்பணிகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு கருதி மின் விநியோகமானது குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்படும். இதையடுத்து இது குறித்த அறிவிப்புகள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

power supply interruption,maintenance work ,மின் விநியோகம் தடை ,பராமரிப்பு பணி

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் அத்துடன் நாளை வாராந்திர விடுமுறை அதனை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (23.10.2023, 24.10.2023) ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் தேவை கருதி மின் தடை செய்யப்படமாட்டாது.

அதனால் பொதுமக்கள் எந்த வித குழப்பமும் இல்லாமல் மின் சார்ந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் வழக்கமாக வாராந்திர விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் ஓய்வெடுப்பர் இது போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு மின் விநியோகமானது தடை செய்யபடாது அதே போல தற்போது ஆயுதபூஜை விடுமுறை நாட்களை முன்னிட்டு மின் விநியோகம் தடை ஏற்படாது.

Tags :