Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

By: Nagaraj Fri, 29 Sept 2023 06:53:06 AM

வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை - வேலூர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் விழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரைநீட்டிக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து அதன் விவரம்: சென்னை கடற்கரையிலிருந்து செப்.29-ம் தேதி மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.45 மணிக்குஅடையும். பின் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

chennai,early morning,train,extension,krivalam,thiruvannamalai ,சென்னை, அதிகாலை, ரயில், நீட்டிப்பு, கிரிவலம், திருவண்ணாமலை

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்து செப்.30-ம் தேதி அதிகாலை 3.45மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்கு அடையும்.

அதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.05 மணிக்கு அடையும் என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Tags :
|