நவ. 25 இங்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Mon, 20 Nov 2023 5:18:20 PM
நாமக்கல் : தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக 100 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
எனவே அதன் படி மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 25ம் ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து இந்த முகாமானது காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதில் ஆண், பெண் மற்றும் அனைத்து கல்வித்தகுதியுடையோரும் பங்கேற்று வேலை வாய்ப்பை பெறலாம்.
மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ளவிருக்கும் நிறுவனங்கள் 0426-281131 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வருகிற நவ.23-க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.