Advertisement

பள்ளி, கல்லூரிகளுக்கான நவ.2023 மாத விடுமுறை நாட்கள்

By: vaithegi Tue, 31 Oct 2023 12:46:53 PM

பள்ளி, கல்லூரிகளுக்கான நவ.2023 மாத விடுமுறை நாட்கள்

சென்னை: தமிழகத்தில் வர இருக்கும் நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதைஆய்டுது வழக்கமாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று.

ஆனால் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12ஆம் தேதி அன்று வர உள்ளது. அதிலும் குறிப்பாக நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தினம் என்பதால் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விடுமுறைகள் எதுவும் வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை.

holidays,school,college ,விடுமுறை நாட்கள்,பள்ளி, கல்லூரி

வருகிற நவம்பர் 11ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை , 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக 2 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும்.

மேலும் இதை தவிர நவம்பர் 5 ,19 , 26 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் நவம்பர் 25 நாலாவது சனிக்கிழமை ஆகிய நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும்.இதனை அடுத்து நடப்பாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை மற்றும் கூடுதல் விடுமுறைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் சற்று வருத்தத்தில் உள்ளனர்,

Tags :
|