Advertisement

இனி இவர்களும் மருத்துவராகலாம்

By: vaithegi Sat, 25 Nov 2023 08:03:28 AM

இனி இவர்களும் மருத்துவராகலாம்

சென்னை: 11,12 -ஆம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம், தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு ...

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பதினொன்று மற்றும் 12-ம் வகுப்புகளில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. அதாவது மொழி பாடத்துடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

norms,national education policy ,விதிமுறை,தேசிய கல்விக் கொள்கை

இந்த நிலையில் தற்போது தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அதன்படி, 11,12 ஆம் வகுப்பில் பயாலஜி படிக்காதவர்களும் இனி மருத்துவராகலாம், தேசிய கல்விக் கொள்கையின்படி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து உள்ளது.

பயாலஜி படிக்காதவர்கள் தனியாக உயிரியல் பாடம் படித்து தேர்வு எழுத வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளது. முந்தைய விதிகளின்படி 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் கூடுதல் பாடங்களை எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

Tags :
|