Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும்... என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பு

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும்... என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பு

By: Monisha Fri, 27 Nov 2020 08:30:31 AM

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும்... என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் அறிவிப்பு

வருகிற 2021-ம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளன. என்.ஆர். காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ரிப்பன் வெட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் சிறப்பு பூஜை செய்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

n.r. congress,party,aiadmk,bjp,coalition ,என்.ஆர். காங்கிரஸ்,கட்சி,அ.தி.மு.க.,பா.ஜ.க,கூட்டணி

விழாவில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., கோபிகா எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் தேனீ.ஜெயக் குமார் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

விழாவிற்கு பின்பு ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- "நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளோம். ஏற்கனவே நாங்கள் அ.தி.மு.க., பா.ஜ.க. வுடன் கூட்டணியில் தான் இருக்கிறோம். இந்த கூட்டணி வருகின்ற தேர்தலிலும் தொடரும்" என்று கூறினார்.

Tags :
|
|
|