Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன உதவியுடன் பாகிஸ்தானில் அமைக்கப்படும் அணுமின் நிலையம்

சீன உதவியுடன் பாகிஸ்தானில் அமைக்கப்படும் அணுமின் நிலையம்

By: Nagaraj Thu, 22 June 2023 8:43:33 PM

சீன உதவியுடன் பாகிஸ்தானில் அமைக்கப்படும் அணுமின் நிலையம்

இஸ்லாமாபாத்: சீன உதவியுடன் அணுமின் நிலையம்... பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி பகுதியில் ஷஷ்மா-வி சீனாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது.

1,200 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணுமின் நிலையத்தை அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா ரூ.39,000 கோடி கடனாக வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று கையெழுத்திட்டார்.

china,nuclear power plant,pakistan, ,அணு, சீனா, நிலையம், பாகிஸ்தான், மின்சாரம், முக்கிய திட்டம்

அணுமின் நிலைய ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

எனவே இந்த திட்டம் தாமதமின்றி முடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான திட்டத்தை தாமதப்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்தையும் அவர் கடுமையாக சாடினார்.

Tags :
|