Advertisement

உக்ரைனில் உள்ள அணு உலை செயல்பாடு நிறுத்தப்பட்டது

By: Nagaraj Mon, 12 Sept 2022 08:42:36 AM

உக்ரைனில் உள்ள அணு உலை செயல்பாடு நிறுத்தப்பட்டது

உக்ரைன்: அணு உலை செயல்பாடு நிறுத்தம்... உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்தின் கடைசி அணு உலையின் செயல்பாடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.

அணுமின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு வெளியாகும் அபாயத்தைத் தவிா்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஸபோரிஷியா அணுமின் நிலையம் ஐரோப்பாவிலேயே பெரிய அணுமின் நிலையமாகும். உக்ரைன் மீதான போா் தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அணுமின் நிலையத்தை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அதைத் தொடா்ந்து, அணுமின் நிலைய பகுதியில் அடிக்கடி குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால், அணுமின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு வெளியாகும் அபாயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்கு ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின. சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) குழுவினா் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து, அப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தினா்.

authorities,action,ukraine,radiation,danger,electricity ,
அதிகாரிகள், நடவடிக்கை, உக்ரைன், கதிர்வீச்சு, அபாயம், மின்சாரம்

இருப்பினும் தொடா் தாக்குதல் காரணமாக, இந்த அணுமின் நிலையத்துக்கு வெளியிலிருந்து வரும் மின்சாரம் கடந்த வாரம் துண்டிக்கப்பட்டது. ஏற்கெனவே அதன் 5 உலைகளின் செயல்பாடு நிறுத்தப்பட்ட நிலையில், 6-ஆவது அணு உலை மட்டும் செயல்பட்டு வந்தது. அணு உலைகளைக் குளிா்விப்பதற்கான மின்சார தேவைக்காக மட்டும் அதன் மின் உற்பத்தி பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புடன் ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீண்டும் இணைக்கப்பட்டது. அணு உலைகளைக் குளிா்விப்பதற்குத் தேவையான மின்சாரம் வெளியிலிருந்து கிடைத்ததையடுத்து, 6-ஆவது அணு உலையின் செயல்பாட்டை அணுமின் நிலைய அதிகாரிகள் நிறுத்தினா். தொடா் தாக்குதல் காரணமாக அணுமின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு வெளியாகும் அபாயத்தைத் தவிா்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Tags :
|
|