Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செயற்கைகோளால் இயக்கப்படும் துப்பாக்கி மூலம் அணு விஞ்ஞானி கொலை?

செயற்கைகோளால் இயக்கப்படும் துப்பாக்கி மூலம் அணு விஞ்ஞானி கொலை?

By: Nagaraj Wed, 09 Dec 2020 08:28:34 AM

செயற்கைகோளால் இயக்கப்படும் துப்பாக்கி மூலம் அணு விஞ்ஞானி கொலை?

அணு விஞ்ஞானி மோசென் செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கி மூலம் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகளுள் ஒருவர் மோசென் ஃபக்ரிஸாதே. இவர் ஈரானின் தலைநகா் டெஹ்ரான் நகரில் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணை செய்யப்பட்டதில் செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கி மூலம் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டிவருகிறது. இந்த இயந்திரத் துப்பாக்கி, மொசென் ஃப்ரிஸாதேவின் முகத்தை மட்டுமே குறிவைத்து சுமார் 13 சுற்றுகள் சுடப்பட்டுள்ளது.

assassination,iran,nuclear,satellite,gun ,படுகொலை, ஈரான், அணுசக்தி, செயற்கைகோள், துப்பாக்கி

இதனால் அவரது பாதுகாவலா்களுக்கும் மா்ம நபா்களுக்கும் இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் சில பாதுகாவலா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் படுகொலையால் ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றம் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Tags :
|