Advertisement

உலக அளவில் கொரோனா எண்ணிக்கை

By: vaithegi Sat, 25 Feb 2023 10:30:05 AM

உலக அளவில் கொரோனா எண்ணிக்கை

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.94 கோடியாக உயர்ந்துள்ளது.

corona,world,virus ,கொரோனா ,உலகம் ,வைரஸ்

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 94 லட்சத்து 72 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 414 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 65 கோடியே 22 லட்சத்து 63 ஆயிரத்து 840 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 67 லட்சத்து 97 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|