Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரிப்பு

By: Monisha Fri, 21 Aug 2020 10:15:00 AM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அந்த தகவலின் படி, மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 283 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 742 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 1 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,testing ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பரிசோதனை

இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 73 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 லட்சத்து 51 ஆயிரத்து 411 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 76 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 39 லட்சத்து 88 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags :