Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.57 லட்சத்தைக் கடந்தது

மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.57 லட்சத்தைக் கடந்தது

By: Monisha Mon, 05 Oct 2020 09:05:00 AM

மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.57 லட்சத்தைக் கடந்தது

மெக்சிகோவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.57 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.50 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 4863 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

mexico,corona virus,infection,death toll,treatment ,மெக்சிகோ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி எண்ணிக்கை,சிகிச்சை

மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.57 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 5.45 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|