Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

By: vaithegi Wed, 01 Mar 2023 1:48:23 PM

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

இந்தியா: உலகம் முழுவதும் 679,972,187 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,800,189 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் , உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 652,845,592 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,326,406 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2335 ஆக பதிவாகியுள்ளது.

corona,india,union ministry of health ,கொரோனா ,இந்தியா,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,772 ஆக உள்ளது. இதுவரை மற்றும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,53,504ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220,63,94,232 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,343 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags :
|
|