Advertisement

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை

By: vaithegi Sun, 01 Jan 2023 10:16:55 AM

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை

வாஷிங்டன்: சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள 220-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,count ,கொரோனா ,எண்ணிக்கை

இதையடுத்து இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரத்து 813ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 63 கோடியே 67லட்சத்து 55ஆயிரத்து 497பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 66 லட்சத்து 96 ஆயிரத்து 881பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|