Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் குறைந்து வரும் கொரோனா...கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது

சென்னையில் குறைந்து வரும் கொரோனா...கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது

By: Monisha Thu, 23 July 2020 11:29:44 AM

சென்னையில் குறைந்து வரும் கொரோனா...கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 188 பகுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு உள்ள இடத்தில் 14 நாட்களுக்கு புதிய தொற்று ஏற்படவில்லை என்றால், 'சீல்' அகற்றப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 107 பகுதிகளில் சீல் அகற்றப்பட்டு அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது.

chennai,corona virus,restricted area,vulnerability ,சென்னை,கொரோனா வைரஸ்,கட்டுப்படுத்தப்பட்ட பகுதி,பாதிப்பு

தற்போது தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஒரு தெருவுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 9 பகுதிகள், அம்பத்தூர் மண்டலத்தில் 8 பகுதிகள், அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 27 பகுதிகள் உள்பட மொத்தம் 81 பகுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் தற்போது ஒரு தெரு கூட கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இல்லை. அனைத்து பகுதிகளிலும் சீல் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :