Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்த நர்ஸ் கைது

இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்த நர்ஸ் கைது

By: Karunakaran Thu, 12 Nov 2020 12:43:14 PM

இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்த நர்ஸ் கைது

இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் ஆஸ்பத்திரியில் நர்சாக லூசி லெட்பை (வயது30) பணியாற்றி வந்தார். இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15 பச்சிளம் குழந்தைகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பைத் தொடர்ந்து முன்கூட்டிய குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவர்களிடம் கண்டறியப்பட்டபோது உள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு நர்சு லூசி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக போலீசார் நர்சு லூசியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

nurse,arrest,killing 8 children,uk hospital ,செவிலியர், கைது, 8 குழந்தைகள்  கொலை, இங்கிலாந்து மருத்துவமனை

நர்சு லூசியின் நண்பர்களும் குடும்பத்தினரும் இதுகுறித்து கூறுகையில், நர்சு லூசி​​ கனிவானவர். இதனால் செவிலியர் லூசி நிரபராதி என்று கூறினார்.தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் லூசி மீது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அவர் எதற்காக ? ஏன் குழந்தைகளை கொன்றார் என தெரியவில்லை. இந்நிலையில் குழந்தைகளை கொன்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags :
|
|