Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இந்த தேதி முதல் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம் என அறிவிப்பு

சென்னையில் இந்த தேதி முதல் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம் என அறிவிப்பு

By: vaithegi Tue, 12 Sept 2023 11:46:31 AM

சென்னையில் இந்த தேதி முதல் செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம் என அறிவிப்பு


சென்னை: எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.மதியரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் ட்ஜெறிவிக்கப்பட்டுயிருப்பதாவது: கரோனா தொற்றுக் காலத்தின்போது, 2020-ம் ஆண்டு 6,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தற்காலிக முறையில் பணியில் அமர்த்தப்பட்டனர். இதனை அடுத்து அதில் 3,000 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அதேபோன்று, 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தரம் செய்யப்பட்டனர்.

ஏறத்தாழ 3,300 செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணியில் அமர்த்தப்படாத 3,290 தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 2021 அக்டோபர் 4-ம் தேதி அரசிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தோம்.

hunger strike,nurses ,உண்ணாவிரத போராட்டம் ,செவிலியர்கள்


2022 மார்ச் 8-ம் தேதி எங்களதுகோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அரசு அளித்த வாக்குறுதியை மீறி, 2022 டிசம்பர் 31-ம் தேதி எவ்வித முன்னறிவிப்புமின்றி, 3 ஆண்டுகள் பணிபுரிந்த செவிலியர்களை திடீரென பணிநீக்கம் செய்தனர். ஆனால் அதேநேரத்தில், மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக மாற்றுப் பணி வழங்கப்படும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,அத்தகைய பணி ஏதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எங்களுக்கு 6 வாரத்தில் பணி வழங்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், அந்தஉத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டோம். ஆனால், காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து தற்போது 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிஉள்ளது. எனவே அதன்படி, வருகிற 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் நடைபெற உள்ளது.இதில் 1,000 செவிலியர்கள் பங்கேற்க உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :