Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தர்மபுரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

தர்மபுரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

By: Nagaraj Sat, 16 May 2020 4:01:53 PM

தர்மபுரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பணி புறக்கணிப்பு... அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் குமுதா என்கிற செவிலியரும் அவருடன் பணியாற்றும் மற்றொரு செவிலியர் இருவரும் நேற்று இரவு பணி முடித்துவிட்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரிசெட்டிஅள்ளிக்கு காவேரிப்பட்டிணம் அருகே பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலியே செவிலியர் குமுதா உயிரிழந்தார்.

மற்றொரு செவிலியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். நேற்று இரவு குமுதாவின் உடலை உறவினர் வாங்காததையடுத்து. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பிரிசோதனை அறைக்கு கொண்டு வந்தனர். மருத்துவனையில் 300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்

இதில் வெளியூர்களிருந்து வரும் செவிலியர்களுக்கு தனியார் பள்ளியில் தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததாலும், சமூக இடைவெளியில்லாமல் ஒரே அறையில் 30க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் செவிலியர்களை தங்க வைப்பதால், கொரோனா தொற்றுக்கு வழிவகை செய்யும் என்பதால், செவிலியர்கள் தனியார் பள்ளியில் தங்காமல் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

nurses,work neglect,struggle,basic amenities ,செவிலியர்கள், பணி புறக்கணிப்பு, போராட்டம், அடிப்படை வசதிகள்


கொரோனா காலத்தில் அரசு மருத்துவனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மருத்துவனையில் தங்குவதற்கும், கழிப்பறை, குடிநீர், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் மாவட்டம் மற்றும் மருத்துவ நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை.

இதனால் செவிலியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது செவிலியர் குமுதா விபத்தில் இறந்துள்ளார். இதனால் செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்னர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் தேன்மொழி,வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
|