Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மனச்சோர்வால் பணியே வேண்டாம் என்று சொந்த ஊருக்கு புறப்படும் நர்ஸ்கள்

மனச்சோர்வால் பணியே வேண்டாம் என்று சொந்த ஊருக்கு புறப்படும் நர்ஸ்கள்

By: Nagaraj Fri, 22 May 2020 10:21:01 AM

மனச்சோர்வால் பணியே வேண்டாம் என்று சொந்த ஊருக்கு புறப்படும் நர்ஸ்கள்

கொரோனா நோயாளிகளுடன் இருப்பதால் சமூக புறக்கணிப்பு, உணவு பற்றாக்குறை, பணிச்சுமை, மனச்சோர்வு போன்ற காரணங்களால் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மணிப்பூரை சேர்ந்த 185 நர்ஸ்கள் வேலையே வேண்டாம் என்று ஊருக்கு திரும்பி உள்ளனர்.

இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்தால் அவர்கள் அனைவரும் தலைநகர் இம்பாலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை, கொல்கத்தா மருத்துவமனைகளில் இருந்து 500 நர்ஸ்கள் வேலையை விட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 300 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

nurses quit,workloads,stress,neglect ,நர்சுகள், வேலையை விடுகின்றனர், பணிச்சுமை, மன அழுத்தம், புறக்கணிப்பு

கொரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட அத்தியாவசய பொருட்களை கூட வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பணியில் இருந்தபோது இன வேற்றுமை, பாகுபாடு பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் வேலையை விட்டு வந்த நர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா நோயாளிகளுடன் இருப்பதால் சமூக புறக்கணிப்பு மற்றும் குறைந்த அல்லது சம்பளம் இல்லாமை, வீட்டு தனிமைப்படுத்தலின் போது உணவு பற்றாக்குறை, பணிச்சுமை, மனச்சோர்வு என்று பல காரணங்களால் நர்கள் வேலையை விட்டு ஊர் திரும்புதாக கூறப்படுகிறது.

Tags :
|