Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு .... சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

அதிமுக பொதுக்குழு .... சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

By: vaithegi Tue, 06 Sept 2022 3:43:42 PM

அதிமுக பொதுக்குழு ....  சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

இந்தியா : ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு ... கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த 2-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இதை அடுத்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், 'அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.

o. panneer selvam,supreme court , ஓ.பன்னீர் செல்வம்,சுப்ரீம் கோர்ட்

மேலும் தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது' என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இத்தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில் 'இந்த விவகாரத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவு பிறப்பிக்கக்கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :