Advertisement

வேட்பாளரை இன்று அறிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்

By: vaithegi Wed, 01 Feb 2023 4:44:22 PM

வேட்பாளரை இன்று அறிவிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்

சென்னை: இன்று மாலை அறிவிக்கிறார் ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.இதையடுத்து அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் எம்எல்ஏ -வும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வரும் கே.எஸ். தென்னரசுவை இன்று வேட்பாளராக அறிவித்தார்.

o. panneer selvam,candidate ,ஓ.பன்னீர் செல்வம்,வேட்பாளர்

இதையடுத்து இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து வேட்பாளர் யார் என தனது ஆதரவாளர்களுடன் அறிவிப்பை வெளியிடுகிறார்.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று காலை தங்கள் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் யாரை வேட்பாளராக களமிறக்க உள்ளார் என்ற பெரிய ஆவலுடன் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags :