Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக மக்கள் வரலாறு கண்டிராத வெற்றியை தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

தமிழக மக்கள் வரலாறு கண்டிராத வெற்றியை தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

By: Monisha Mon, 28 Dec 2020 08:12:17 AM

தமிழக மக்கள் வரலாறு கண்டிராத வெற்றியை தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

அ.தி.மு.க. பிரசார பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. அதில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-

எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பார்போற்றும் முதல்-அமைச்சராக வலம் வந்தார். அனைத்து நிலைகளிலும் மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் சமநிலையை பெறவேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து சிறப்பான ஆட்சி நடத்தினார். எத்தனையோ கட்சிகள் தமிழகத்தை ஆண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அனைவரும் சிந்தித்து பார்க்கும் சாதனை திட்டங்களை தந்தவர், ஜெயலலிதா தான்.

ஒரு பக்கம் ஆட்சி, ஒரு பக்கம் கட்சி. இவை இரண்டையும் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா எண்ண ஓட்டங்களின்படி நாங்கள் நிலைநிறுத்தி இருக்கிறோம். நாம் ஆட்சியில் இருக்கும்போது என்னென்ன சாதனைகளை செய்தோம் என்பதை வீடு வீடாக சென்று, விவரமாக மக்களுக்கு சொல்லுங்கள்.

o. panneerselvam,admk,election,people,victory ,ஓ.பன்னீர்செல்வம்,அ.தி.மு.க,தேர்தல்,மக்கள்,வெற்றி

தி.மு.க. ஆட்சியில் செய்யத்தவறிய விஷயங்களையும் எடுத்து செல்லுங்கள். நில அபகரிப்பு, அராஜகபோக்கு, 80 சதவீத மின்வெட்டு போன்ற தி.மு.க.வின் தோல்விகளை எடுத்து சொல்லுங்கள். மக்களை காப்பாற்ற முடியாத ஒரு கையாளாகாத அரசாக தி.மு.க. செயல்பட்டதை எடுத்து சொல்லுங்கள். நல்லரசு அமையவேண்டும் என்றால் அது அ.தி.மு.க. ஆட்சியால் தான் நிலைநிறுத்த முடியும் என்று மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

நமக்கு எந்த கெட்டபெயரும் கிடையாது. ஜெயலலிதா ஆட்சி போலவே இப்போதும் இருக்கிறது என்ற நல்ல பெயர் இருக்கிறது. இந்த நல்ல பெயரை வாக்குகளாக கொண்டு சேர்க்கிற கடமை ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனுக்கு உண்டு. எதையும் அலசி ஆராய்ந்து சிந்தித்து பார்த்து சரியான தீர்ப்பு வழங்கும் தமிழக மக்கள், வரலாறு கண்டிராத வெற்றியை நமக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஒற்றுமையாக செயல்புரிந்து ஓய்வில்லா உழைப்பை தந்து வெற்றிக்கனியை பறிப்போம் என்று கூறினார்.

Tags :
|
|