Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

By: Monisha Thu, 27 Aug 2020 12:55:32 PM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற தயார் என்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரிகளிடம் வியாபாரிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

கோயம்பேடு சந்தை மூடப்பட்டாலும் தினந்தோறும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சந்தை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தற்போது ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணியும் நடந்து வந்தன. இதனால் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

chennai,koyambedu,market,o panneerselvam,inspect ,சென்னை,கோயம்பேடு,மார்க்கெட்,ஓ பன்னீர்செல்வம்,ஆய்வு

அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற செய்யும் வகையில் நேற்று கோயம்பேடு சந்தை வளாகத்தில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகளையும் துரிதப்படுத்த அதிகாரிகள் குழு உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது பற்றி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து மூடப்பட்டுள்ள மார்க்கெட்டில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதனால் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

Tags :
|