Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் .. ஓ.பன்னீர்செல்வம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் .. ஓ.பன்னீர்செல்வம்

By: vaithegi Thu, 26 Jan 2023 6:11:00 PM

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்  ..   ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் .. .... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்27-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என 2 தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோன்று நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் தனியாக களமிறங்கவுள்ளன.

candidate,o. panneerselvam ,வேட்பாளர் ,ஓ.பன்னீர்செல்வம்

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பு பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவரது குலதெய்வ கோயிலான வன பேச்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தான் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்.மேலும் தனது சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். வேட்பு மனுவே 31-ம் தேதி முதல்தான் துவங்க உள்ளது” என அவர் கூறினார்.

Tags :