Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒபாமா ஒரு திறமையற்ற அதிபர் - விமர்சனத்திற்கு அதிபர் டிரம்ப் பதிலடி

ஒபாமா ஒரு திறமையற்ற அதிபர் - விமர்சனத்திற்கு அதிபர் டிரம்ப் பதிலடி

By: Monisha Mon, 18 May 2020 5:13:05 PM

ஒபாமா ஒரு திறமையற்ற அதிபர் - விமர்சனத்திற்கு அதிபர் டிரம்ப் பதிலடி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிபர் டிரம்பின் அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் மற்றும் முன்னாள் அதிபர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா டிரம்ப் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது அதற்கு அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

இணைய தளம் மூலம் நடந்த ஒரு பள்ளி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஒபாமா பேசும்போது, “நாட்டின் தலைமையிடம் இருக்கும் தோல்விகளை இந்த பெருந்தொற்று காட்டி விட்டது. குறைந்தது கொரோனாவை கட்டுப்படுத்துவது போல நடிக்க கூட தெரியவில்லை. அமெரிக்காவின் மானத்தை வாங்கும் வகையில் தாறுமாறான கேள்விகளை ஆட்சிகள் இருப்பவர்கள் எழுப்புகின்றன” என்று அதிபர் டிரம்பை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

america,corona virus,president trump,barack obama,white house ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,அதிபர் டிரம்ப்,பராக் ஒபாமா,வெள்ளை மாளிகை

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது ஒபாமா தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து டிரம்பு கூறும்போது, “ஒபாமா ஒரு திறமையற்ற அதிபராக இருந்தார். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். அவர் முற்றிலும் திறமையற்றவர்” என்று தெரிவித்தார்.

america,corona virus,president trump,barack obama,white house ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,அதிபர் டிரம்ப்,பராக் ஒபாமா,வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் நடைபெற உள்ளது. டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோபீடனுக்கு ஆதரவாக ஒபாமா தீவிரமாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்தே அவர் டிரம்பின் அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

Tags :