Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக்.25ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக்.25ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 18 Oct 2023 1:53:05 PM

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக்.25ம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் : மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1,038 சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக்.25ம் தேதி உள்ளூர் விடுமுறை ...தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்நிலையில் 1,038 – வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகிற அக்டோபர் 25 - ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார்.

local holiday,thanjavur ,உள்ளூர் விடுமுறை,தஞ்சாவூர்


இந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அரசு சார்பாக மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். அமேலும் ன்றைய தினம் கவியரங்கம், நடன நாட்டிய நிகழ்ச்சி பட்டிமன்றம், நாடகம், கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இதில் மாணவ மாணவியரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளுர் விடுமுறையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :