Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்

By: vaithegi Fri, 20 Oct 2023 3:45:48 PM

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்


சென்னை: தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1 குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000, மற்றும் 2 பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 நேரடியாக பெண்குழந்தையின் வங்கி கணக்கில்வரவு வைக்கப்படுகிறது.

இதையடுத்து ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 1 முறையும் இந்த வைப்புத்தொகை புதுப்பிப்பு செய்யப்பட்டு அந்த பெண்குழந்தை 18 வயது நிறைவடைந்ததும் வட்டியுடன் சேர்த்து அத்தொகை மாவட்ட சமூக நலத்துறை மூலமாக அந்த குழந்தைக்கு வழங்கப்படும்.

scholarship,chief ministers girl child protection scheme ,உதவித்தொகை ,முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்


அதாவது, 35 வயதிற்கு கீழ் உள்ள பெற்றோர் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்திருந்தால் இச்சலுகைகையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில், ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தைகளை மட்டுமே வைத்தோருக்கும் பெற்றோர்கள் முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இணைந்து பலனை பெறலாம். மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.

தற்போது இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் தகுதியுள்ள பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் வருகிற அக்.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :