Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் விபத்தில் உயிரிந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் .. ஒடிசா அரசு

ரயில் விபத்தில் உயிரிந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் .. ஒடிசா அரசு

By: vaithegi Sun, 04 June 2023 2:26:06 PM

ரயில் விபத்தில் உயிரிந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்  ..   ஒடிசா அரசு

ஒடிசா: ஒடிசாவில் 3 ரயிகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாக அரசு அறிவிப்பு ... ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து தற்போது வரைக்கும் 280 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

government of odisha,relief ,ஒடிசா அரசு,நிவாரணம்

மேலும், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து அவசரகால பேரிடர் விரைவு படை மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்திருக்கின்றனர். இதனை ஒத்து இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த மாநிலத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், ஒடிசா அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க இருப்பதாகவும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாகவும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

Tags :