Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆம்பன் புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகிறது ஒடிசா

ஆம்பன் புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகிறது ஒடிசா

By: Nagaraj Sun, 17 May 2020 6:48:26 PM

ஆம்பன் புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகிறது ஒடிசா

புயலை சமாளிக்க தயாராகும் ஒடிசா... வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'ஆம்பன்' புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஒடிசா அரசு தயாராகி உள்ளது.

வங்க கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு தாய்லாந்து வழங்கியுள்ள 'ஆம்பன்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்க கடலின் மத்திய பகுதி தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். 'ஆம்பன்' புயல், தீவிர புயலாக மாற உள்ளது.


odisha,storm,preparing,alternative shelters,study ,ஒடிசா, புயல், தயாராகி வருகிறது, மாற்று தங்குமிடங்கள், ஆய்வு

வரும் 20ம் தேதி, மேற்கு வங்கம் - வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயல் சின்னத்தால், ஒடிசாவில் இரண்டு நாட்ளுக்கு மிக கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் வசிப்போருக்கு, மாற்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளுடன், புயல் சேதத்தையும் ஒடிசா எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|