Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்களில் திருடப்பட்ட 22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையானவை என உறுதி

கோவில்களில் திருடப்பட்ட 22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையானவை என உறுதி

By: Monisha Wed, 09 Dec 2020 10:27:58 AM

கோவில்களில் திருடப்பட்ட 22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையானவை என உறுதி

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சாமி சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிவன், விஷ்ணு, பெருமாள், விநாயகர் உள்பட 22 கற்சிலைகள் சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 17 பஞ்சலோக சிலைகள் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் உள்ளன.

இந்த சிலைகள் அனைத்தும் உண்மையிலேயே பழமைவாய்ந்தவைகள் தானா என அதன் உண்மை தன்மையை கண்டறிய மத்திய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் மகேஸ்வரி, ஓய்வுபெற்ற தொல்லியல் துறை இயக்குனர் தயாளன், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஷீலா, ஓய்வுபெற்ற அதிகாரி பாலசுப்பிரமணி ஆகியோர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 22 சாமி கற்சிலைகளை ஆய்வு செய்தனர்.

temples,sculptures,theft,archeology,antiquities ,கோவில்கள்,கற்சிலைகள்,திருட்டு,தொல்லியல் துறை,பழமை

அதில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் அனைத்துமே மிகவும் பழமையானவைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிலைகள், தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களுக்கு சொந்தமானவை என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இது பற்றி தொல்லியல் துறை சார்பில் முழுமையான அறிக்கையை தயார் செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தரப்படும். அதன் பின்னர் உரிய கோவில்கள் எவை என்பதை கண்டுபிடித்து சிலைகள் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Tags :
|