Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுபானம் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை வெளியேற்றிய அதிகாரிகள்

மதுபானம் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை வெளியேற்றிய அதிகாரிகள்

By: Nagaraj Sat, 08 Apr 2023 11:07:26 PM

மதுபானம் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை வெளியேற்றிய அதிகாரிகள்

அமெரிக்கா: தகராறு செய்த பயணி... அமெரிக்காவில் விமானம் புறப்படும் முன் மதுபானம் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை அதிகாரிகள் விமானத்திலிருந்து இழுத்துசென்று வெளியேற்றினர்.

முதல் வகுப்பு பயணிகளுக்கு, விமானம் புறப்படும் முன் மதுபானமோ அல்லது குளிர்பானமோ பரிமாறுவதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது.

pilot,alcohol,argument,flight crew,pet ,விமானி, மதுபானம், வாக்குவாதம், விமானக்குழுவினர், கை விலங்கு

இந்நிலையில் விமான பணிப்பெண்ணை மரியாதை குறைவாகத் திட்டி ஜின் வகை காக்டெய்ல் கேட்டு வாக்குவாதம் செய்த பயணியை விமானத்தை விட்டு வெளியேறுமாறு விமான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாக்குவாதம் செய்தவரை காவலர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, விமானத்தில் பயணிகள் ஏற பயன்படுத்தப்படும் ஜெட் பிரிட்ஜுடன் சேர்த்து அவரது கைகளுக்கு விலங்கிட்டனர்.

Tags :
|