Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

By: Nagaraj Fri, 24 Feb 2023 10:53:39 PM

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கடன் உதவி பெற்று நாட்டின் பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசு சமாளித்து வருகிறது.

இதற்கிடையில், இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலை மார்ச் 9ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், நிதிப் பற்றாக்குறையால், உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டது.

adjournment,local government elections,sri lanka , இலங்கை, உள்ளாட்சி தேர்தல், ஒத்திவைப்பு

வாக்குச் சீட்டு அச்சடிப்பதற்கும், வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கும் நிதி வழங்க கருவூலம் மறுத்துவிட்டது. போதிய நிதி இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடி தொடர்பான பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை மார்ச் 9ஆம் தேதி நடத்துவது கடினம் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடையே இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Tags :