Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் புதிய வகை வைரஸ் ..தமிழகத்தில் அந்த பாதிப்பு இருக்கிறதா அதிகாரிகள் ஆலோசனை

சீனாவில் புதிய வகை வைரஸ் ..தமிழகத்தில் அந்த பாதிப்பு இருக்கிறதா அதிகாரிகள் ஆலோசனை

By: vaithegi Mon, 27 Nov 2023 4:57:09 PM

சீனாவில் புதிய வகை வைரஸ்  ..தமிழகத்தில் அந்த பாதிப்பு இருக்கிறதா அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: கொரோனாவின் தாயகமான சீனாவில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு போன்ற நுரையீரல் நோய்க்கான அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியானது.

இதையடுத்து இது குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. இது குறித்து சீன அரசு கூறுகையில், சீனாவில் புதிய நோய் தொற்று கிருமி பாதிப்பு எதுவும் கண்டறியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

authorities,china,new type of virus ,அதிகாரிகள் ,சீனா, புதிய வகை வைரஸ்

குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினருக்கு ஏற்கனவே தெரிந்த நிமோனியா தாக்குதல் தான் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் உள்ளதா என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மேலும் இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் நிமோனியா தொற்று பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags :
|