Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை தி.நகரில் மட்டும் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியதற்கு... அதிகாரிகள் விளக்கம்

சென்னை தி.நகரில் மட்டும் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியதற்கு... அதிகாரிகள் விளக்கம்

By: vaithegi Wed, 29 June 2022 11:07:09 AM

சென்னை தி.நகரில் மட்டும் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியதற்கு... அதிகாரிகள் விளக்கம்


சென்னை : சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தமாக 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, சென்னை தி நகரில் திடீரென வாகன நிறுத்தக் கட்டணத்தை உயர்த்துவது என சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தற்போதைக்கு சென்னை தி நகரில் பிரீமியம் பார்க்கிங் கட்டணம் காருக்கு ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ரூபாய் 40 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கார்களுக்கான கட்டணம் ரூபாய் 20 அதிகரித்து ரூ. 60 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல இருசக்கர வாகனங்களின் கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது மோட்டார் வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 5 அதிகரித்து ரூ. 15 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

parking fee,car ,பார்க்கிங் கட்டணம் ,கார்

இதையடுத்து திடீரென பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போதைக்கு சென்னையில் மட்டுமே 83 இடங்களில் பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை தி.நகரில் மட்டும் ஏன் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகனங்களை நிறுத்தும் இடமாக பார்க்கிங் பகுதி வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. எனவே, இதற்கான பராமரிப்பு செலவு மிக அதிகம் என்பதால் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Tags :