விமானங்களில் கிருமி நீக்கம் செய்ய அதிகாரிகள் தீர்மானம்
By: Nagaraj Mon, 22 June 2020 11:40:44 AM
கிருமி நீக்கம் செய்ய தீர்மானம்... எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டிற்கு வரும் அனைத்து விமானங்களும் விசேட தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் நிறுத்தி கிருமி நீக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உரிய நேர அட்டவணையின்றி இலங்கைக்கு வரும் விமானங்கள் நாட்டுக்குள்
வருவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் உரிய
அனுமதி பெறுவது கட்டாயமாகும் என சுற்றுலா மற்றும் விமான சேவை அமைச்சு
தெரிவித்துள்ளது.
அதற்கமைய விமானங்களில் வரும் பயணிகள் தொடர்பிலும் உரிய தகவல்கள் அதில் உள்ளடக்கப்படுவது கட்டாயமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
Tags :
flights |