Advertisement

ஓலா, ஊபர் கால் டாக்சி கட்டணம் அதிகரிப்பு

By: vaithegi Wed, 18 Oct 2023 3:27:02 PM

ஓலா, ஊபர் கால் டாக்சி கட்டணம் அதிகரிப்பு

சென்னை: கட்டணம் உயர்வு .. சென்னையில் தனியார் வாகனங்களை வணிக ரீதியாக இயக்க எதிர்ப்பு தெரிவித்து ஓலா, ஊபர் ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்,

மேலும் மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும், ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும் , பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

fares,ola,uber ,கட்டணம் ,ஓலா, ஊபர்

இந்த நிலையில் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஓலா, உபர் வாடகை கார்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு- தாம்பரம் இடையே ஊபர் செயலி கார் வாடகைக்கு 1300 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் அத்துடன் ஓலா செயலியில் 600 வரை வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஓலா, உபர் செயலி கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Tags :
|
|