Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூமியில் வசிக்கும் மிகவும் வயதான உயிரினம்... 190 வயது ராட்சத ஆமை

பூமியில் வசிக்கும் மிகவும் வயதான உயிரினம்... 190 வயது ராட்சத ஆமை

By: Nagaraj Sun, 04 Dec 2022 3:33:20 PM

பூமியில் வசிக்கும் மிகவும் வயதான உயிரினம்... 190 வயது ராட்சத ஆமை

தெற்கு அட்லாண்டிக்: இங்கிலாந்தின் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள செயின்ட் ஹெலினாவில் ஜொனாதன் என்ற ராட்சத ஆமையும் வசித்து வருகிறது.

ஜொனாதன் 1832ஆம் ஆண்டு பிறந்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அதன் பின் 50 வருடங்கள் கழித்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான சீஷெல்ஸில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஜொனாதன் தற்போது தனது 190வது பிறந்த ஆண்டை அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

very old,turtle,birthday,carrot,spinach,cucumber ,மிகவும் வயதானது, ஆமை, பிறந்தநாள், கேரட், கீரை, வெள்ளரி

அதன்மூலம் தற்போது பூமியில் வசிக்கும் மிகவும் வயதான உயிரினம் ஜொனாதன். செயின் ஹெலினா நகரின் கவர்னர் குடியிருப்பில் உள்ள தோட்டத்தில் தனது ஓய்வு காலத்தை மிகவும் ரம்மியமாக கழித்து வருகிறார், ஜொனாதன். தனது வாழ்வின் அனைத்து சுப காரியங்களையும் அங்கு கொண்டாடி வருகிறார். அவர் குறித்து உருவான சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவும் அங்குதான் நடைபெற்றது.


கேரட், கீரை, வெள்ளரி, ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆகியவை ஜொனாதனுக்கு மிகவும் பிடித்தமானவை என கூறும் அதன் பராமரிப்பாளர்கள், மேற்கூறியவற்றை சேர்த்துதான் ஜொனாதனின் பிறந்தநாள் கேக்கையும் உருவாக்கியுள்ளனர். மேலும், ஜொனாதானுக்கு பிடித்த மற்றொன்றும் அங்கு இருக்கிறது. அது வேறு யாருமல்ல, 50 வயதே ஆன எம்மா என்ற பெண் ஆமைதான்.

Tags :
|
|