Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5 சதவீதம் குறைப்பதாக அறிவிப்பு

ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5 சதவீதம் குறைப்பதாக அறிவிப்பு

By: vaithegi Sun, 29 Oct 2023 08:01:10 AM

ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5 சதவீதம் குறைப்பதாக அறிவிப்பு


சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணைய அலுவலகத்தில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினருடன் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகள் பற்றி நடத்தப்பட்ட கூட்டத்தில் போக்குவரத்து துறையின் கோரிக்கையை கோரிக்கையை ஏற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5 சதவீதம் குறைப்பதாக அறிவித்து உள்ளது.

இதையடுத்து கடந்தாண்டு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மேலும் 5 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது எந்த வித புகாரும் இன்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.


omni bus fare,percent , ஆம்னி பேருந்து கட்டணம்,சதவீதம்


கடந்தாண்டு 25% மற்றும் இந்தாண்டு 5% என 2 ஆண்டுகளில் 30 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. காவல்துறை அறிவுரையின்படி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலையில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு கடை பிடிப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்..சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக புகார் தெரிவிக்க 94445014450, 9445014436 என்ற எண்களை அழைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :