Advertisement

ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிரடியாக உயர்வு

By: vaithegi Mon, 17 Oct 2022 5:55:09 PM

ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிரடியாக உயர்வு

சென்னை: கட்டணம் அதிரடியாக உயர்வு ... வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கூடுதலாக பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதையடுத்து இந்த நிலையில் சென்னையில் ஆம்னி பஸ்களின் கட்டணம் ஆனது அதிரடியாக உயர்த்தப்படுவது வழக்கமாகும். அதனால் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்த்துவதை கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

fare,omni bus ,கட்டணம் ,ஆம்னி பஸ்

மேலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இதன் முடிவில் ஆம்னி பஸ்களில் உயர்த்தப்படும் கட்டணத்திற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதில் தென் மாவட்டங்களுக்கு ரூ.700 முதல் ரூ.1200 என வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த கட்டண உயர்வு குறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் கூறியிருப்பதாவது, இந்த கட்டண உயர்வானது தற்போது தேவை அதிகமாக இருப்பதால் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதே போன்று தேவை குறையும் போது கட்டணம் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இதன் மூலமாகவே தங்களின் நஷ்டத்தை ஈடு செய்ய முடியும் என கூறியுள்ளார்.

Tags :
|