Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடை விடுமுறை முடிவதால் …… உயர்கிறது ஆம்னி பஸ்களின் கட்டணம்

கோடை விடுமுறை முடிவதால் …… உயர்கிறது ஆம்னி பஸ்களின் கட்டணம்

By: vaithegi Thu, 09 June 2022 5:33:33 PM

கோடை விடுமுறை முடிவதால் …… உயர்கிறது ஆம்னி பஸ்களின்  கட்டணம்

சென்னை:

1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு முதலில் வகுப்பு திறக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ந்தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 27-ந்தேதியும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுகிறது.

எனவே, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை வருகிற 13-ந்தேதி முடிவடையும் நிலையில் உள்ளதால் வெளியூர் சென்று இருந்த பெற்றோர், குழந்தைகள் பள்ளிகள் திறப்பதால் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.

summer holidays,schools,omni buses,fares ,கோடை விடுமுறை,  பள்ளிகள், ஆம்னி பஸ்கள், கட்டணம்

இதனால் வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. அரசு பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆம்னி பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பி வருகின்றன. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கோவை செல்லக்கூடிய ஆம்னி பஸ்களும், அங்கிருந்து சென்னைக்கு வரக்கூடிய பஸ்களிலும் தேவை அதிகரித்து வருவதை அறிந்து ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மதுரை – சென்னைக்கு : குளிர்சாதன படுக்கை கட்டணம் ரூ.1,600 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரையிலும் குளிர்சாதன இருக்கை வசதிக்கு ரூ.1,500 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

summer holidays,schools,omni buses,fares ,கோடை விடுமுறை,  பள்ளிகள், ஆம்னி பஸ்கள், கட்டணம்

தூத்துக்குடி-சென்னைக்கு : ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,650 முதல் ரூ.2,350 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,300-கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர் சாதன வசதி அல்லாத படுக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுதுள்ளனார்.

Tags :