Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; கல்வித்துறை அறிவிப்பு

10ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; கல்வித்துறை அறிவிப்பு

By: Nagaraj Sat, 08 Aug 2020 08:39:09 AM

10ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; கல்வித்துறை அறிவிப்பு

வரும் 10ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.

10th class,exam results,10th,students,sms ,10ம் வகுப்பு, தேர்வு முடிவுகள், 10ம் தேதி, மாணவர்கள், குறுஞ்செய்தி

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பு வழங்கப்படாது.

அற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், வரும் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|