Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 13ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது

வரும் 13ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது

By: Nagaraj Thu, 31 Aug 2023 7:37:42 PM

வரும் 13ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ம் தேதி நடக்க உள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியல் வளர்ச்சியின் உச்சம். அதிநவீன இயந்திரங்களை மனிதர்களைப் போலவே செயல்பட வைக்கும் தொழில்நுட்பம் இது. தற்போது கல்வி, மருத்துவம், தொழில் என பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது.

artificial,conference,intelligence,parliament,united states ,அமெரிக்கா, செயற்கை, நாடாளுமன்றம், நுண்ணறிவு, மாநாடு

எனவே, இதுகுறித்து எம்.பி.க்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ம் தேதி மாநாடு நடத்தவுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும், எம்.பி.க்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் எக்ஸ் (டுவிட்டர்) நிறுவன உரிமையாளர் எலோன் மஸ்க், மெட்டா நிறுவன உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

Tags :