Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) மு.க.ஸ்டாலின் நெல்லை வருகிறார்

வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) மு.க.ஸ்டாலின் நெல்லை வருகிறார்

By: vaithegi Sat, 27 Aug 2022 3:18:16 PM

வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) மு.க.ஸ்டாலின் நெல்லை வருகிறார்

நெல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும், அரசு சார்பில் பல புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகிறார்.

இதையடுத்து நெல்லையில் ரூ.5 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்காக பணிகளை அவர் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பாளையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள மேடை போலீஸ் நிலையத்தையும் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.


m.k.stalin,nellie ,மு.க.ஸ்டாலின்,நெல்லை

மேலும் இதுதவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் முடிவுற்ற பணிகள், நெல்லை மாவட்டத்தில் நிறைவடைந்த பல பணிகளையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவுக்கான இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் மிக தீவிரமாக நடை பெற்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, ஆர்.டி.ஓ.சந்திர சேகர் மற்றும் அதிகாரிகள் நேற்று பாளை பெல் மைதானம், மருத்துவ கல்லூரி மைதானம் உள்ளிட்ட சில இடங்களில் ஆய்வு செய்தனர்.

இதில் மருத்துவ கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இன்னும் ஓரிரு நாளில் இது பற்றி முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Tags :