Advertisement

இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் மத்தியில் மோதல்

By: Nagaraj Sun, 10 May 2020 3:15:18 PM

இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் மத்தியில் மோதல்

புதுடில்லி: இந்தியா- சீனா ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கிமின் வடக்கில் உள்ள நகுலா பகுதியில் எல்லையில், இந்தியா - சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

problem,sikkim,india,china,soldiers,conflict ,பிரச்னை, சிக்கிம், இந்தியா, சீனா, வீரர்கள், மோதல்

வடக்கு சிக்கிமில், இந்தியா மற்றும் சீன ராணுவத்திற்கு இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இரு நாட்டு அதிகாரிகள் தலையீடு மற்றும் ஆலோசனைக்கு பிறகு வீரர்கள் பிரிந்து சென்றனர். எல்லை பிரச்னை தீர்க்கப்படாததால், தற்காலிக மற்றும் குறுகிய கால மோதல்கள் ஏற்படுகின்றன.

problem,sikkim,india,china,soldiers,conflict ,பிரச்னை, சிக்கிம், இந்தியா, சீனா, வீரர்கள், மோதல்

இது போன்ற பிரச்னைகளை, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிமுறைகளின்படி வீரர்கள் தீர்த்து கொள்வார்கள். இந்நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு, இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|
|